Home /News /employment /

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலையா: அரசு விளக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலையா: அரசு விளக்கம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு- அரசு விளக்கம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு- அரசு விளக்கம்

புலனம் என்ற வாட்ஸ்-ஆப் செயலி மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை மற்றும் தவறான தகவல்கள் - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் "Animal handler and Animal Handler cum Driver" ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்படுவதாக வாட்ஸப் செயலி மூலம் பொய்யான தகவல் பகிரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, வாட்ஸ்-ஆப் செயலி மூலம் ’தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் (ம) கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் ஒட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு, சம்பளம் முறையே ரூ.15,000/ மற்றும் ரூ.18,000/ எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடலாம். இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 பணியிடங்கள் வீதம்) என வெளியிடப்பட்டுள்ளது’.  இது தவறானது. இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை மற்றும் தவறான தகவல்கள். எனவே யாரும் இந்த தவறான செயலியை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Jobs

    அடுத்த செய்தி