முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / முதியோர் உதவித்தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்படும் - அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

முதியோர் உதவித்தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்படும் - அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

முதியோர் உதவித் தொகை

முதியோர் உதவித் தொகை

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு தலா 3000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் முதியோர் உதவி தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.என்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபை இன்று அறிவித்தார்.

ஆந்திர சட்டசபை பட்ஜெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சட்டசபையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது 34 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. எங்கள் ஆட்சியில் இப்போது 64 லட்சம் பேருக்கு தலா 2750 முதியோர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: முதியவர்களுக்கு சூப்பர் வேலை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ!

பட்ஜெட்டில் முதியோர் உதவி தொகையை தலா 3000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவோம் என்று தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு தலா 3000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார்.

First published:

Tags: Pension Plan