ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை அமேசான் நிறுவனத்தில் தர நிர்ணயாளர் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை அமேசான் நிறுவனத்தில் தர நிர்ணயாளர் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அமேசான்

அமேசான்

புதிய தொழில் திறன்களை நீங்கள் கற்றுக் கொண்டிருந்தால், கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் 'Quality Analyst' பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  பணியிடம்: சென்னை, கார்ப்பரேட்  அலுவலகம்

  கல்வித் தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  புதிய சவால்களை எட்டும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

  கடமை: விற்பனை ஊக்குவிப்பு,விலை உள்ளீடுகளின் துல்லியத்தை சரிபார்த்து  தணிக்கை செய்வது, விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலைக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது, வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே இருக்கும் இயக்கத்தை  கண்காணிப்பது, பிழையாக உயர்த்தப்பட்ட பொருட்களின் விலையைக் கண்டறிந்து சரிசெய்ய  பல்வேறு பங்குதாரர்களை தொடர்புகொள்வது,  உலகெங்கிலும் உள்ள அமேசானின் சில்லறை/3P குழுக்களுடன் தொடர்பு கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

  விண்ணப்பம் செய்வது  எப்படி? 

  விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர் www.amazon.jobs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  புதிய தொழில் திறன்களை நீங்கள் கற்றுக் கொண்டிருந்தால், கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அமேசான் நிறுவனம் சென்னை: 

  சென்னை தமிழ்நாட்டில் மிகப்பெரிய இணைய அங்காடியாக உருவாகி வருகிறது. முன்னதாக, 6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் புதிய கட்டிடத்தை அமேசான் நிறுவனம் திறந்தது. தமிழ்கத்தில் இணைய அங்காடியைத் தாண்டி, உற்பத்தியிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

  ஒப்பந்த அடிப்படையில் பெல் நிறுவனத்தில் பணி : 50,000க்கும் மேல் சம்பளம்

  சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைச் சேர்ந்த கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி என்ற உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது உற்பத்தியை அமேசான் நிறுவனம் துவங்கியது. நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஃபயர் டிவி ஸ்டிக் கருவிகளை, உற்பத்தி நிலையம் தயாரிக்க உள்ளது.

  Quality Analyst

  Published by:Salanraj R
  First published:

  Tags: Amazon