ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ரூ.5000 நிதியுதவி - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ரூ.5000 நிதியுதவி - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம்

அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம்

UPSC Personality test : அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் நடத்தப்படும் மாதிரி ஆளுமை தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.5000 வழங்கப்படவுள்ளது. மாதிரி நேர்காணலுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற வேண்டும் என்ற வகையில் அரசு சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் மூலம் தங்குவதற்கு இடம், கட்டணமின்றி உணவு மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் நூல்கள் கொண்ட நூலகம் போன்ற வசதிகளைக் கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்குகின்றனர்.

இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றும் இறுதி முடிவுகள் 6.12.2022 ஆம் நாள் வெளியானது. அதில் அரசின் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 18 மாணவர்கள் வெற்றி பெற்றியுள்ளனர் என்று தகவலை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் அவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நேர்காணலை எதிர்கொள்ளவுள்ளனர். அவர்களை அதற்குத் தயார் செய்யும் வகையில் மாதிரி நேர்காணல் நடத்தவுள்ளனர். இதற்குப் பயிற்சி மையத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களும் மாதிரி நேர்காணலில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி நேர்காணல் தேர்வர்களுக்கு மிகப் பெரிய பயிற்சியாக இருப்பதோடு தங்கள் செயல்பாட்டை இன்னும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தரும்.

மாதிரி நேர்காணல்:

இந்த மாதிரி நேர்காணல் 02.01.2023 திங்கட்கிழமை மற்றும் 03.01.2023 செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்கள் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் நாள் காலை நேர்காணல் குறித்தும் அதில் தேவைப்படுகிற திறன்கள் குறித்தும், தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்படுவதுடன் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும். பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மாதிரி நேர்காணலை ஆறு குழுக்கள் நடத்தவுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலைமைச் செயலாளர் நிலையில் பணிபுரிகிறவர்கள், மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றியவர்கள், குடிமைப்பணித் தேர்விற்குப் பயிற்சி அளிக்கிற பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்ற திறன் போன்றவற்றைத் துல்லியமாகப் பரிசீலனை செய்கிற உளவியல் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வர்களுக்கு மாதிரி நேர்காணலுக்கான காணொலி பதிவும் வழங்கப்படும். கலந்துகொள்ளுபவர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Also Read : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... முக்கிய அப்டேட்..

உதவித்தொகை:

நேர்காணலில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு மாதிரி நேர்காணலில் அவர்கள் செயல்பாடு குறித்த சான்றிதழ் மற்றும் நேர்காணலில் கலந்துகொள்ளுவதற்கு ரூ.5000 உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாதிரி நேர்காணலுக்கும் விண்ணப்பிக்கத் தேர்வர்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை (சுயவிவரக் குறிப்புடன் DAF I & DAF II) பயிற்சி மைய முதல்வருக்கு alcscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ 29.12.2022க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்படிவத்தை  www.civilservicecoaching.com என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்ற இணையத்தளத்தை அணுகவும்.

First published:

Tags: Central Government Jobs, Personality Test, UPSC