முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

உயர்நிலை வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனம்

உயர்நிலை வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனம்

AIWC Recruitment : தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிறுவனத்தின் திட்டத்தில் பணிபுரிய 2 Project Scientist பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் 15.02.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Project Scientist2ரூ.70,000

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST/Women/BC/MBC/மாற்றுதிறனாளி பிரிவினருக்கு 5 வருடம் வரை வயது தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

பதவிகல்வித்தகுதி
Project ScientistZoology / Parasitology பிரிவில் Ph.D பட்டம் அல்லது Biotechnology / Microbiology பிரிவில் Ph.D மற்றும் Zoology/Wildlife Biology பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது Molecular Biology பிரிவில் Ph.D மற்றும் Zoology / Wildlife Biology முதுகலைப் பட்டம் அல்லது Parasitology/ Pathology/ Animal Biotechnology/ Microbiology முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Project ScientistZoology பிரிவில் Ph.D அல்லது Entomology பிரிவில் Ph.D அல்லது Agriculture Entomology பிரிவில் Ph.D அல்லது Wildlife biology பிரிவில் Ph.D அல்லது Ecology பிரிவில் Ph.D பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. சிவகங்கையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://forests.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து இமெயில் மூலம் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இமெயில் முகவரி : aiwcrte@tn.gov.in

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Forest Department

Advanced Institute for Wildlife Conservation,

Vandalur, Chennai - 600048.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.02.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Job vacancies, Jobs