விமானப் படையில் காலியாகவுள்ள 163 அதிகாரி பணியிடங்கள்!

தகுதியானவர்கள் அஃப்கேட் தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

news18
Updated: December 26, 2018, 9:38 PM IST
விமானப் படையில் காலியாகவுள்ள 163 அதிகாரி பணியிடங்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: December 26, 2018, 9:38 PM IST
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு 163 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அஃப்கேட் (AFCAT 1/2019) தேர்வு மூலம் ஃபிளையிங், டெக்னிக்கல் மற்றும் கிரவுன்ட் டியூட்டி பிரிவுகளின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: ஃபிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுன்ட் டியூட்டி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஃபிளையிங் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்போர் 3 ஆண்டு கால பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோநாடிக்கல் போன்ற பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு பிரிவுகளில் இளங்கலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமா, சிஏ படித்தவர்கள் கிரவுண்ட் டியூட்டி பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் அஃப்கேட் தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்.

Loading...

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 30. மேலும் விவரங்களுக்கு, https://careerindianairforce.cdac.in/, https://afcat.cdac.in/AFCAT/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: December 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...