டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொல்கத்தா, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கேபின் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பை தொடங்கியுள்ளது.
பல்வேறு நகரங்களில் நடக்கும் நேர்காணலுக்கான தேதிகளை ஏர் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கனவு உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
குறிப்பாக டாடா குழுமத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி, டெல்லியில் மே 24 ஆம் தேதியிலும், கொல்கத்தாவில் மே 27 ஆம் தேதியிலும், மும்பையில் ஜூன் 1 ஆம் தேதியிலும், பெங்களூருவில் ஜூன் 4 ஆம் தேதியிலும், ஹைதராபாத்தில் ஜூன் 8 ஆம் தேதியிலும் இந்த வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெற உள்ளது.
டெல்லியில் நடக்க உள்ள வேலைவாய்ப்பு நேர்காணல் மே 24 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தாஜ் பேலஸில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே டெல்லியை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த நேரத்தில் நேர்காணலில் பங்கு பெறலாம்.
ALSO READ | ஓஎன்ஜிசி 922 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
ஏர் இந்தியாவில் புதிதாக நுழைந்துள்ள அகசா ஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டிலும் மீண்டும்ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா கிளையில் உள்ள இந்த வேலை வாய்ப்பு தகவல்கள் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், “#WingsOfChange இன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான வாய்ப்பு! எங்களின் நேர்காணல்களில் கலந்து கொள்ளுங்கள். மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பையும் தவறவிடாதீர்கள்." என்பதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். மேலும் இந்த நேர்காணலுக்கு விண்ணப்பிக்க சில தகுதி நிலைகள் உள்ளன. இதுகுறித்து அதன் இணையதளத்தில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேபின் க்ரூவிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது.
குறிப்பாக அனுபவம் வாய்ந்த கேபின் பணியாளர்களுக்கு, அவர்களின் வயது 32-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன், இந்திய நாட்டவராக இருக்க வேண்டும்.
ALSO READ | ரிமோட் வேலை, ஹைப்ரிட் மாடல், குறைவான வேலை நேரம்.. இளைஞர்கள் விரும்புவது என்ன? சர்வே முடிவுகள்
விண்ணப்பதாரர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும், மேலும் 6/6 பார்வை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச உயரமாக பெண்ணுக்கு 157 செமீ மற்றும் ஆணுக்கு 172 செ.மீ இருக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு 18-22 BMI அளவும், ஆண்களுக்கு 18-25 BMI அளவும் கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.