எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2000 நர்ஸ் பணியிடங்கள்!

நாட்டில் டெல்லி, போபால், பாட்னா உள்பட பல இடங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்கள் (எய்ம்ஸ் மருத்துவமனைகள்) இயங்கி வருகின்றன.

news18
Updated: October 24, 2018, 7:49 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2000 நர்ஸ் பணியிடங்கள்!
கோப்புப் படம்
news18
Updated: October 24, 2018, 7:49 PM IST
நாட்டில் டெல்லி, போபால், பாட்னா உள்பட பல இடங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்கள் (எய்ம்ஸ் மருத்துவமனைகள்) இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் நர்ஸ் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

எவ்வளவு பணியிடங்கள்: போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 600 நர்ஸ் பணியிடங்களும், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 600 நர்ஸ் பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 நர்ஸ் பணியிடங்களும், ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 300 நர்ஸ் பணியிடங்களும் என மொத்தம் 2000 நர்ஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, ஜெனரல் நர்சிங், நர்சிங் மிட்வைபரி டிப்ளமா படித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 1500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 1200-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 29. மேலும், விவரங்களுக்கு www.aiimsexams.org என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
First published: October 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...