அரசு வேலையை நம்பி காத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அட்டவணை அமைந்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக தலைமையிலான அரசு, 2023ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 1754 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது. இது அரசு வேலையை நம்பி காத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்
திமுக தனது தேர்தல் அறிக்கையில் "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால் திமுகவினரின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்று அறிக்கை என்பதை அவர்களது செயல்பாடுகளால் ஒவ்வொருநாளும் நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள்.
இதையும் வாசிக்க: TNPSC காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை தாமதிப்பதா? பன்னீர்செல்வம் கேள்வி
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இங்கு தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருந்தால்தான் அரசு இயந்திரம் சரியாக வேலை செய்யும். அப்போதுதான் மக்கள்நலத் திட்டங்களையும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். அவ்வாறு இல்லையென்றால் பெரிதும் பாதிப்படைவது தமிழக மக்கள் தான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
திமுகவினர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு அரசு வேலையில் பணியாளர்களை நிரப்பாமல் இருந்தால் எவ்வாறு முதல் தலைமுறை பட்டதாரிகளை முன்னுக்கு கொண்டு வரமுடியும் என்று தெரியவில்லை? ஆனால் தங்களுடைய வாரிசை முன்னுக்கு கொண்டு வருவதை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்துள்ளார்கள்.
இதையும் வாசிக்க: 8ம் வகுப்புத் தேர்ச்சியா? சுகாதார அலுவலகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு
எனவே, தமிழக அரசு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிரப்பிட வேண்டும். தமிழகத்தில் வேலையில்லாமல் காத்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளம் சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும், அதன் அடிப்படையில் புதிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sasikala, Tamil Nadu Government Jobs, TNPSC