தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை தாமதப்படுத்தும் திமுக அரசிற்கு பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவனையை (TNPSC Annual Planner 2023) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில், அடுத்த குரூப் 4 தேர்வு 2024ல் நடைபெறும் என்றும், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2023ம் ஆண்டிற்கான அரசுப் பணிகள் தேர்வு அட்டவணையை தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக் காட்டிய அவர், " 2023ல் குரூப் 4,2, 2ஏ ஆகிய தேர்வுகளை நடத்தாமல் காலம் தாழ்த்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்க: TNPSC Annual Planner 2023 : கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வேலைவாய்ப்பு
மாநில நிதிப் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கும், வெளிமுகமைகள் மூலம் பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டே, உள்நோக்கத்துடன் இந்த கால தாமதத்தை மேற்கொள்கிறதா என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் இன்று நிலவுவதாகவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: O Pannerselvam, TNPSC