ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அக்னிபாத் திட்டம் : இந்திய விமானப்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரங்கள் இதோ!

அக்னிபாத் திட்டம் : இந்திய விமானப்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரங்கள் இதோ!

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான வீரர்கள் சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு விவரங்கள்:

  பணியின் பெயர்Agniveer விமானப்படை வீரர்கள்
  வயது வரம்பு27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.
  சம்பளம்முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

  கல்வித்தகுதி :

  கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி

  அல்லது

  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

  அல்லது

  தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  ஆன்லைன் எழுத்து முறை தேர்வு நடத்தப்படும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Document Verification, eligibility test, physical fitness test, medical examination போன்றவை நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  Also Read : ரூ.85,570/- சம்பளம்.. மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!

  விண்ணப்பிக்கும் முறை :

  இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனின் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn

  குறிப்பு :

  அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் தான் இந்திய விமானப்படையில் பணியாற்ற முடியும்.

  முக்கிய நாட்கள் :

  விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் : 07.11.2022
  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.11.2022
  ஆன்லைன் தேர்வு நாள் : 18.01.2023 முதல் 24.02.2023 வரை.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Agnipath, Army jobs, Indian army