அக்னி வீரர்கள் பணியில் இருக்கும் போதே, தங்களது வேலையுடன் தொடர்புடைய திறன் பயிற்சி சான்றிதழ்களைப் ( Skill India certification) பெறுவார்கள் என்று மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,"மத்திய அமைச்சரவையால் செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இளைஞர்கள் தேசத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆயத்த நிலைக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய திறன் பயிற்சி பெற்ற பெருமளவிலான இளைஞர்களை உருவாக்கக் கூடியதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
3. #Agniveers will be provided with Skill India Certification while in service, which will enable them to pursue diverse job and entrepreneurship opportunities post completion of their tenure.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 17, 2022
அக்னிபத் திட்டத்தில் இணைவதில் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மிகுந்த பெருமிதம் அடைவதோடு, இளம் இந்தியர்களைக் கொண்ட எதிர்காலத்திற்கு ஏற்ப ஆயத்தமாக இருக்கக் கூடிய ராணுவத்தை உருவாக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றும்.
இதையும் வாசிக்க:
மத்திய ஆயுதக் காவல்படையில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு - உள்துறை அமைச்சகம்
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தங்களது வேலைக்கான பணிகளுக்கேற்ற கூடுதல் திறன் பயிற்சி பெறும் விதமாக, ஆயுதப்படைகளில் பல்வேறு பிரிவுகளுடன், திறன் இந்தியா இயக்கம் மற்றும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படும்.
இதையும் வாசிக்க:
பதிவிக்காலம் முடிந்த அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் முன்னுரிமை: மத்திய அரசு
அக்னி வீரர்கள் பணியில் இருக்கும் போதே, தங்களது வேலையுடன் தொடர்புடைய திறன் பயிற்சி சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யும் விதமாக, பயிற்சி பிரிவு தலைமை இயக்குனரகம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், பல்வேறு துறை திறன் மேம்பாட்டுக் குழுக்கள், தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகிய திறன் இந்தியாவிற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளும் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும்".இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army jobs, Recruitment