Home /News /employment /

அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு

அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் விதமாக அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    இதேபோல பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில் அதிக திறன் கொண்ட அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தென் மாநிலங்களுக்கும் பரவியுள்ளன. பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளாவில் ஆளுநர் மாளிகை அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ராணுவ பணிக்கான தேர்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Agnipath, India, Protest

    அடுத்த செய்தி