முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வேலூரில் அக்னிபத் ஆள்சேர்ப்பு முகாம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வேலூரில் அக்னிபத் ஆள்சேர்ப்பு முகாம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். செப்டம்பர் மாதம் 3ம் தேதிக்குப் பிறகு இச்சேவை  முற்றிலுமாக நிறுத்தப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

ராணுவ ஆள் சேர்ப்பு மண்டலம் தலைமை அலுவகம், சென்னையின் மூலம் வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில், ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

11 மாவட்டங்கள்:  தமிழ்நாட்டிலுள்ள கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு  என 11 மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தில் இருந்தும் தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு:  அக்னிவீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பப் பணி, எழுத்தர், பண்டகக் காப்பாளர் மற்றும் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு (agniveer Tradesman 8th pass/ 10th pass) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

முக்கியமான நாட்கள்:   ஆகஸ்ட்  05 முதல் செப்டம்பர் 3 வரை தங்களது பெயர்களை பதிவு செய்யவேண்டும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். செப்டம்பர் மாதம் 3ம் தேதிக்குப் பிறகு இச்சேவை  முற்றிலுமாக நிறுத்தப்படும்.

நவம்பர் 15 முதல் நவம்பர் 25  வரை ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும். இதற்கான, அனுமதிச் சீட்டு நவம்பர் 1 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம் பெற்றிருக்கும்.

கல்வி தகுதி :  8 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்  தெளிவுரை பெற ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) , புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600 009 என்ற முகவரியிலோ, 044 – 2567 4924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு நடைமுறைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் முற்றிலும் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, ஆள்சேர்ப்புக்கு உதவுவதாகவோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ கூறி, மோசடியில் ஈடுபடுவோரை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம்:    முன்னதாக, இந்தியாவின் முப்படைகளில் ஆயுதப் படைகளில் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான ‘அக்னிபத்’ திட்டத்துக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.    

இந்த  திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.

4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

மாதாந்திர சம்பளம் கையில் கிடைக்கும் சம்பளம் (70%)அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு (30%)தொகுப்பு நிதிக்கு அரசின் பங்கு 
All figures in Rs (Monthly Contribution)
முதலாம் ஆண்டில்300002100090009000
இரண்டாம் ஆண்டில்330002310099009900
3ம் ஆண்டில்36500255801095010950
4ம் ஆண்டில்40000280001200012000
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட மொத்த நிதிRs 5.02 LakhRs 5.02 Lakh
4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு  ரூ. 11.71  லட்சம்சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் (வட்டியுடன் சேர்த்து) வீரர்களுக்கு வழங்கப்படும்

முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும்.

இதையும் வாசிக்க: இந்திய கடற்படையில் வெளியான புதிய வேலை... 10ம் வகுப்பு படித்தால் போதும் - விவரம் இங்கே

4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

First published:

Tags: Agnipath