வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ஆன்லைனில் வரவேற்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ஆன்லைனில் வரவேற்பு அதிகரிப்பு
  • Share this:
ஊரடங்கு அமல்படுத்திய பிறகு ஆன்லைன் முறையில் திறன்சார் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள இக்காலக்கட்டத்தில் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படும் திறன் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்ப்பட்டுள்ளதாக அத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா நோய் பரவலை தடுத்திடும் வகையில் 21நாள் ஊரடங்கு அமலில் இருந்துவருகின்றது இந்த காலக்கட்டத்தில் பள்ளி ,கல்லூரி மாணவர்கள் நீட்,,ஜே.இ.இ,,யூ.பி.எஸ்.சி உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கற்று வருகின்றனர்.


அந்தவகையில் செல்போன் பழுதை சரிசெய்வது தொடர்பான பயிற்சி, லேப்டாப் சர்வீஸ்,சூரிய தகடுகள் மற்றும் சி.சி.டி.வி கேமாராக்களை பொருத்துவது போன்ற திறனை மேம்படுத்திடும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்படுகின்றது. இதற்கு தற்போது நல்ல வரவேற்பு ஏற்ப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலால் தடுக்க தற்போது அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கே இதற்கு காரணம். இந்த காலகட்டத்தில் நாட்களை வீணாடிக்காமல் பயனுள்ள முறையில் பயன்படுத்த அதுசார்ந்த வீடுகளில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு தற்போது உண்டாகி இருப்பதாக அத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

கூகிள் ஹேங்க் அவுட்,ஹேங் அவுட் மீட் , லூம் ஆப் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் வீடியோ கான்பிரன்சிங், வெப்பினார் போன்ற முறைகளில் இத்தகைய ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் தற்போது இதில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இத்தகைய வகுப்புகளை நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.இதுதவிர நீட் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆன்லைன் வாயிலாக கிராமப்புற மாணவர்களை காட்டிலும் நகர்புறம் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பதாகவும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் நபர்கள் தெரிவிக்கின்றனர் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதி இல்லாதது ,வைபை,4ஜி போன்ற சேவைகளில் கிராமபுறத்தில் ஏற்ப்படும் குறைபாடு உள்ளிட்டவை இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading