ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கையிலே ஆகாசம்… விமானப்படையில் அசத்தல் வேலைவாய்ப்புகள்..!!

கையிலே ஆகாசம்… விமானப்படையில் அசத்தல் வேலைவாய்ப்புகள்..!!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Indian AirForce Jobs: வானத்தில் பறக்க யாருக்குத்தான் ஆசை இல்லை. சிறகுகள் இல்லா மனிதனுக்கு சிறகு விரித்து பறக்க ஒரு வாய்ப்பை இந்திய விமானப்படை அளிக்கிறது. விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப்பணிக்கு விண்ணப்பங்கள் வெளியீடு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பருந்தாகுது ஊர்க்குருவி….என்று சூரரைப்  போற்று பாட்டு கேட்டு விமானம் ஓட்டி கையிலே ஆகாசத்தை ஏந்தத்துடிக்கும் மக்களே.. இதோ இந்திய விமானப்படையில் சேர ஒரு வாய்ப்பு காத்திருக்கு!

ஜூலை 2023 இல் தொடங்கும் பணிகளுக்கான விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT 2022) அறிவிப்பை இந்திய விமானப்படை (IAF)  வெளியிட்டுள்ளது. விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 1 ஜூன் 2022 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். IAF-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களான careerindianairforce.cdac.in அல்லது afcat.cdac.in இன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வின் மூலம், இந்திய விமானப் படையில் பறக்கும் கிளை மற்றும் தரைப் பணி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) துறைகளில் வேலையில் சேரலாம். இதனுடன், மெட்ராலஜி கிளை நுழைவு மற்றும் பறக்கும் கிளைக்கான  NCC சிறப்பு நுழைவு ஆட்சேர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது .விண்ணப்பங்கள்  ஜூன் 1, 2022 அன்று தொடங்கி விட்டது. ஜூன் 30, 2022 மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

சம்பள வரையறை 

சம்பள நிலை - ரூ. 56100 முதல் ரூ. 1,10,700 - (Level -10)

கல்வி தகுதி :

பறக்கும் பிரிவு விண்ணப்பதாரர், 50% மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், தொழில்நுட்பம்  என்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கிரவுண்ட் டியூட்டி (தொழில்நுட்பம்) கிளை -  50% மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மற்றும் பொறியியல் பிரிவில் 4 ஆண்டுகள் பட்டம்/ ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பறக்கும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 02 ஜூலை 1999 முதல் 01 ஜூலை 2003 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும், அதாவது வயது 1 ஜூலை 2023 தேதியில் விண்ணப்பதாரரின் வயது 24 என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

வர்த்தக விமானி உரிமம் வைத்திருந்தால் 2 ஆண்டுகள் வயது விலக்கு கொடுக்கப்படும். விண்ணப்பதாரர் 02 ஜூலை 1997 முதல் 01 ஜூலை 2003 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்.

தரைப்பணி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 02 ஜூலை 1997 முதல் 01 ஜூலை 2003 வரை பிறந்திருக்க வேண்டும்.

தேவையானது:

விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் அடிப்படைத் தகவல்கள், கல்வித் தகவல்கள், புகைபடம், கையெழுத்து, கட்டை விரல் ஆச்சு மட்டுமே கேட்கப்படும். எந்த சான்றிதழ்களும் பதிவேற்றத் தேவையில்லை. விண்ணப்ப கட்டணம் ரூபாய் 250 மட்டுமே.

ஆகஸ்ட் மதம் 26 முதல் 28 வரை எழுத்துத்தேர்வு நடைபெறும். அதன் முடிவுகள் வந்த பின்னர் நேர்முகத்தேர்வும் உடற்தகுதித்தேர்வும் நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றால் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விமானத்தில் பறக்க தயாராகுங்கள் …விமானப்படை உங்களுக்காக காத்திருக்கு..

First published:

Tags: Air force, IAF, Jobs