பட்டதாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு 2019 ஏப்ரல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

news18
Updated: April 1, 2019, 7:36 PM IST
பட்டதாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம்
news18
Updated: April 1, 2019, 7:36 PM IST
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் காலியாக உள்ள 275 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் துணை இயக்குநர், தொழில்நுட்ப அதிகாரி, உணவு பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர், ஐடி உதவியாளர், இந்தி மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்ட 275 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:
ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்றவாறும் வயது மாற்றமடைகிறது. அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கல்வி தகுதி:


பி.இ., பி.டெக்., சட்டம், எம்பிஏ, எம்சிஏ மற்றும் இதர இளநிலை பட்டப்படிப்பு படிப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

Loading...

கட்டணம்:


பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பிக்க 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு 2019 ஏப்ரல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு https://fssai.gov.in/home/career.html என்ற இணைப்பிற்குச் செல்க.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

மேலும் பார்க்க:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...