ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Job : புவி அறிவியலில் ஆய்வு செய்ய விருப்பமா? கட்டாயம் இதற்கு விண்ணப்பிங்க

Job : புவி அறிவியலில் ஆய்வு செய்ய விருப்பமா? கட்டாயம் இதற்கு விண்ணப்பிங்க

கோப்புப் படம்

கோப்புப் படம்

புவி அறிவியல் துறையில்  ஆராய்ச்சியை அதிகரிப்பதற்காகவும்,  ஆய்வு மாணவர்களுக்கு பல நன்மைகளை அளிப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை இடங்களுக்கான (MRPF JRF/SRF) ஆட்சேர்ப்பு அறிவிப்பை புனேயில் செயல்பட்டு வரும் வெப்பமண்டலம் சார்ந்த வானிலைக்கான இந்திய நிறுவனம் (Indian Institute of Tropical Metrology)  வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த ஆய்வு உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

  MRFP (JRF/SRF) என்பது  புவி அறிவியல் அமைச்சகத்தின் பிரத்யேக  ஆய்வு உதவித் தொகை திட்டமாகும். புவி அறிவியல் துறையில்  ஆராய்ச்சியை அதிகரிப்பதற்காகவும்,  ஆய்வு மாணவர்களுக்கு பல நன்மைகளை அளிப்பதற்காகவும் இது செயல்படுத்தப்படுகிறது.  இதற்கான ஆள்தேர்வு நடைமுறை தேசிய அளவில் நடத்தப்படுகிறது. வழிகாட்டுதலின் படி, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் நான்கு மாதங்கள், புனேயில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிப்பயிற்சித் திட்டத்தில் (Induction Training) கலந்து கொள்ள வேண்டும். அதன் பின், தொடர்புடைய துறைகளில் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து பிஎச்டி மேற்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையும், அடுத்த இரண்டு ஆண்டுகள் முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகையும் வழங்கப்படும்.

  காலியிடங்கள்: 19

  பொது பிரிவினருக்கு 7 இடங்களும்,  பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 1 இடமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 இடங்களும், பட்டியல் கண்ட சாதிகள் மற்றும் பட்டியல் கண்ட பழங்குடியினர் பிரிவினருக்கு தலா இரண்டு இடங்களும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  வயது வரம்பு: இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் , 27 ஜூன் 2022 அன்று 28 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  Physics, Atmospheric Science, Physical Oceanography, Marine Science, Space Sciences, Environmental Science போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். NET/GATE/LS ஆகிய தேர்வுகளில் தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆட்சேர்ப்பு அறிவிப்பில் (ADVERTISEMENT FOR RESEARCH FELLOWSHIPS UNDER MRFP RESEARCH FELLOW PROGRAM

  AT MoES ORGANIZATIONS - PER/02/2022 ) தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன.

  மதிப்பூதியம்: ரூ.31,000 + இதர படிகள்

  இதற்கான, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 2022 , ஜூன்  27 ஆகும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Research