பால்வளத்துறையில் பணியிட இடமாறுதல் : இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர் நாசர் எச்சரிக்கை
பால்வளத்துறையில் பணியிட இடமாறுதல் : இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர் நாசர் எச்சரிக்கை
அமைச்சர் நாசர்
ஆவின் பால்வளத்துறையில் பணியிடை மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்
பால்வளத்துறையில் பணியிட இடமாறுதல் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் தலைமையில் அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விலை விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது.
இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் ஆவின் பால் , பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களை புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின் ) மற்றும் பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகின்றது.
எனவே , ஆவின் பால்வளத்துறையில் பணியிடை மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.