Home /News /employment /

ஆவின் நிறுவனத்தில் வேலை... நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

ஆவின் நிறுவனத்தில் வேலை... நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை

Aavin Recruitment 2022 : பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பிரதம 177 சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 33,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021 22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :































    நிறுவனம் / அமைப்பின் பெயர்ஆவின்
    பதவிகளின் பெயர்கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை4 காலியிடங்கள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி30.08.2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்பிக்கத் தேவை இல்லை. நேரடியாக வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
    அதிகாரப்பூர்வ தளம்https://thoothukudi.nic.in/ta/
    கட்டணம்கட்டணம் கிடையாது.

    இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    இந்த நேர்முக தேர்வு 74F, பாலவிநாயகர் கோவில் தெரு, 2வது தளம், தூத்தக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    ஆவின் வேலைக்கு நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் இந்த விவரங்களை காணவும் :

    https://tamil.news18.com/news/employment/aavin-recruitment-2022-2023-walk-in-interview-for-the-post-of-veterinary-consultant-783695.html

    அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/08/2022081197.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Aavin, Job Vacancy

    அடுத்த செய்தி