ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை... நாளை நேர்காணல் - விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை... நாளை நேர்காணல் - விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
AAVIN நிறுவனத்தில் ரூ,43,000/- சம்பளத்தில் வேலை
AAVIN Recruitment 2022 | AAVIN நிறுவன காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தயார் செய்த விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நாளை நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் NADP திட்டத்தின் மூலமாக காலியாக உள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு நாளை காலை 11 மணியளவில் நேர்முகத்தேர்வு திருப்பூர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட கல்வித் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் , ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tiruppur.nic.in/என்ற இணையதள பக்கத்தில் உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு : இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Tiruppur Co-op Milk Producers Union Limited (AAVIN Tiruppur)
பணிகள்
Doorstep Veterinary Consultants
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
சம்பள விவரம்
ரூ.43,000/-
கல்வித் தகுதி விவரம்
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.V.SC, A.H. Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது தகுதி
குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது
மொத்த காலிப்பணியிட விவரம்
09 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை,
திருப்பூர் – 641 605.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.