ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு - விண்ணப்பித்துவிட்டீர்களா?

news18
Updated: September 4, 2019, 7:48 PM IST
ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு - விண்ணப்பித்துவிட்டீர்களா?
ஆவின் பாலகம்
news18
Updated: September 4, 2019, 7:48 PM IST
தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது ஆவின் நிறுவனம். இந்நிறுவனத்தின் கோவை கிளையில் காலியாக உள்ள 15 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் 15

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:


பணி: Technician (Boilerman) - 01

தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐடிஐ முடித்து ‘பி’ உரிம தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது EEE பிரிவில் டிப்ளமோ மற்றும் ‘சி’ உரிம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Heavy Vehicle Driver -07

Loading...

தகுதி : 8-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்ச 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.19500 - 62000 வழங்கப்படும்.

பணி: Private Secretary Grade III - 01

தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தமிழில் இளைநிலையும், ஆங்கிலத்தில் உயர்நிலையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: உச்சபட்ச வயது வரம்பு இல்லை. அனைத்து பணியிடங்களுக்கும் ஒசி பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் - மாதம் ரூ. 20600 - 65000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழி தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 இதனை கோவையில் மாற்றத்தக்க வகையில், The General Manager, Coimbtore District Co-Operative Milk Producers என்ற பெயரில் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் டி.டி.யாக எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: WWW.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
The Coimbtore District Co-Operative Milk Producers Union Limited, Pachapalayam,

Kalampalayam (Post)

Coimbatore - 641010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  லிங்கை கிளிக் செய்யவும்.

வீடியோ பார்க்க: டிக்-டாக் செயலியில் அறிமுகமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...