வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆவின் பால் முகவர்களாக வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ஆவின் பால் முகவர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக அரசு

வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆவின் பால் முகவர்களாக வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
ஆவின்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு துறைகளில் முடக்கம் ஏற்பட்டு ஏராளமான பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பொது முடக்கத்தின் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் இந்த பேரிடர் காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால்வண்டி முகவர்களை நியமித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்பு தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (விற்பனை) அவர்களிடம் வைப்பு தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.

இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்பினை பயன்படுத்திகொள்ள அனைவரும் வருக வருக என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading