ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) துணை நிறுவனத்தில் 372 பணியிடங்கள்!

இந்த பணியிடங்கள் மதுரை, திருப்பதி, ராய்பூர், உதய்பூர் உள்ளிட்ட 13 விமான நிலைய அலுவலகங்களில் அமைந்துள்ளன. இதில் மதுரையில் 32 பணியிடங்கள் உள்ளன.

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) துணை நிறுவனத்தில் 372 பணியிடங்கள்!
ஏஏஐ துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
  • News18
  • Last Updated: December 9, 2018, 9:12 PM IST
  • Share this:
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) நிறுவனத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனங்களில் ஒன்று ஏஏஐசிஎல்ஏஎஸ் (AAICLAS). இந்நிறுவனத்தில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener) பணிக்கு 372 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்கள் மதுரை, திருப்பதி, ராய்பூர், உதய்பூர் உள்ளிட்ட 13 விமான நிலைய அலுவலகங்களில் அமைந்துள்ளன. இதில் மதுரையில் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் என்.சி.சி. சான்றிதழ், விமான நிறுவனத்தின் ஏவிஎஸ்இசி (AVSEC) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தி, ஆங்கில மொழியறிவு அவசியம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படை வீரர்கள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை) ஏனைய பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன், ரூ.500-க்கான டிடி, பிற சான்றிதழ்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi- 110 003 என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://aaiclas-ecom.org/images/career3.pdf, https://aaiclas-ecom.org/index.aspx ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch

First published: December 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading