சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல் முறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
2020, 2021, 2022 ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்கள்:
சிவில் - 62
எலெக்ட்ரிக்கல் - 84
எலக்ட்ரானிக்ஸ் - 440
கட்டடக்கலை - 10
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 22/12/2022 முதல் 21/01/2022 வரை
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், - 21/01/2023 அன்று 27 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
இதையும் வாசிக்க: ரூ,80,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கொட்டிக் கிடைக்கும் வேலைவாய்ப்பு.!
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிர், மாற்றுத் திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இது தொடர்பான பிற விவரங்களுக்கு AAI-இன் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகலாம். விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் பதவிகளுக்கு ஆன்லைன் வழியாக www.aai.aero என்கிற தளத்தில் “CAREERS” என்ற பிரிவின் கீழ் கிடைக்கும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தெரிவு முறை:
கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு அறிவிக்கை: RECRUITMENT OF EXECUTIVES THROUGH GATE 2020/GATE 2021/GATE 2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs