Home /News /employment /

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ( AAI ) வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ( AAI ) வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப செயல்முறையை ஜூன் 15, 2022 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளது.

    இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப செயல்முறையை இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    அதன்படி, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் aai.aero என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனத்தில் சுமார் 400 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    முக்கியமான தேதிகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள அதற்கென்று தரப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதியாக ஜூன் 15, 2022-ஐ அறிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக ஜூலை 14, 2022-ஐ நிர்ணயித்து உள்ளனர். எனவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த கடைசி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்து கொள்ளலாம்.

    தகுதிக்கான அளவுகோல்கள் : இந்த பதவிகளுக்கான கல்வி தகுதியாக, இயற்பியல் மற்றும் கணிதத்துடன் அறிவியலில் (B.Sc) மூன்றாண்டுகளுக்கான முழுநேர இளங்கலைப் பட்டம் அல்லது முழுநேர இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் (இயற்பியல் & கணிதம் பாடங்கள் ஏதேனும் ஒரு செமஸ்டர் பாடத்திட்டத்தில் பாடமாக இருக்க வேண்டும்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஜூலை 14, 2022 அன்று 27 வயதாக இருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம் : இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். மேலும், SC/ST/பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.81 மட்டுமே செலுத்தினால் போதும். இது தொடர்பான பிற விவரங்களுக்கு AAI-இன் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகலாம். விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு ஆன்லைன் வழியாக www.aai.aero என்கிற தலத்தில் “CAREERS” என்ற பிரிவின் கீழ் கிடைக்கும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு நடைமுறை :  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் தேர்வை தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு, குரல் பரிசோதனை மற்றும் பின்னணி விவரங்கள் சரிபார்ப்பு ஆகிய செயல்முறைகள் நடைபெறும். விண்ணப்பதாரர்களின் தற்காலிகத் தேர்வு என்பது, ஆன்லைன் தேர்வில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தகுதிப் பட்டியலின்படி இருக்கும்.

    ALSO READ |  IDBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?
     மேலும், குரல் பரிசோதனையில் தகுதி பெறுதல், மனநல பரிசோதனை மற்றும் பின்னணி விவரங்கள் சரிபார்ப்பு உட்பட பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிற தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான ஆண்டு வருமானம் என்பது ரூ. 12 லட்சமாக உள்ளது.

    விமான துறையில் தங்களின் கனவுகளை மெய்ப்பிக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி