ஃபிரஷ்ஷராக இருந்தாலும் சரி, வேலையில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி வேலை தேடுபவர்களுக்கு அவர்களுடைய முதல் அடையாளமாக அவர்கள் ரெஸ்யூம் தான் கருதப்படுகிறது. ஒரு நபர் எவ்வளவு திறமையாக இருந்தாலும், அவருடைய திறன் படிப்பு உள்ளிட்ட தகவல்களை அவர்களுடைய ரெஸ்யூமில் குறிப்பிடப்படவில்லை என்றால் அவருடைய விண்ணப்பம் எளிதாக நிராகரிக்கப்படும். தற்பொழுது மிகவும் போட்டி நிறைந்த உலகில் சராசரியான விவரங்களைக் கூறும் ஒரு ரெஸ்யூம் போதாது. வேலை தேடுபவர்களுக்கு பவர்ஃபுல் ரெஸ்யூம் தேவைப்படுகிறது.
பவர்ஃபுல் ரெஸ்யூம் என்றால் என்ன? பவர்ஃபுல் ரெஸ்யூம் என்பது வேலைக்கு விண்ணப்பிக்கும் நபரின் அனைத்து விவரங்களும், ‘இந்த விண்ணப்பதாரர் தான் எங்களுக்கு பொருத்தமானவர்’ என்று தேர்வாளர் / நிறுவனம் முடிவு செய்யும் வகையில் அமைந்திருக்கும். பவர்ஃபுல் ரெஸ்யூமில் என்னென்னே விவரங்கள் எவ்வாறு சேர்க்கப்பட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
நீங்கள் பணியாற்றிய திட்டம் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் ஆனால் அதன் முக்கியத்துவத்தை பற்றி விலாவாரியாக அல்லது அதிகப்படியாக எந்த தகவலையும் கூற வேண்டாம்.நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் வேலைக்கு எந்த திறன்கள் தேவை என்று அறிந்து இருப்பீர்கள். எனவே அது சார்ந்த திறன்களை பற்றி தெளிவாக குறிப்பிடுங்கள்.
Read More : முதல் தலைமுறை தொழில் முனைவோரா? ரூ. 25 லட்சம் மானியத்திற்கு விண்ணப்பியுங்கள்
அது மட்டுமில்லாமல் நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக எந்த திறன்களில் எல்லாம் முன்னேறி இருக்கிறீர்கள் என்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும். மேலும், பிரச்சனைகளை தீர்ப்பது, தலைமை பண்பு வகிப்பது, குழுவாக இணைந்து செயல்படுவது சார்ந்த திறன்களை நீங்கள் ஹைலைட் செய்ய வேண்டும்.எல்லா விவரங்களையும் வழங்க வேண்டும் என்று உங்கள் ரெஸ்யூமில் கண்டபடி விவரங்களை சேர்க்க வேண்டாம். அதே போல, உங்களுக்கு தெரியாத விவரங்களை சேர்த்து, வேலை கிடைத்தால், முதலில் அது தான் பிரச்சனையாக மாறும்.
ரெஸ்யூம் என்பது, உங்கள் பிம்பம், நீங்கள் யாரென்று பிரதிபலிக்கும் ஒரு கருவி என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அதன் அடிப்படையில், வேலைக்கான உங்கள் விண்ணப்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தேர்வாளரைத் தூண்டும். எனவே நேர்த்தியான, அனைத்து முக்கிய விவரங்களையும் கொண்ட, எடுத்துக்காட்டுகள் மற்றும் தரவுகளுடன் உங்களின் திறமைகளை முன்னிலைப்படுத்தும் ரெஸ்யூமை உருவாக்க வேண்டும்.
மேலும், நேர்த்தியாக, சீராக கட்டமைக்கப்பட்ட, பிழையில்லாமல் எழுதப்பட்ட ஒரு ரெஸ்யூம் உங்கள் நேர்காணலை மிகவும் சுலபமாக்கும்.உங்கள் வேலை அனுபவம், திட்டங்கள், திறன்கள் என்று ஒவ்வொரு பிரிவையும் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு ரெஸ்யூம், ஒரு விண்ணப்பதாரரின் ஆளுமையையும் வெளிப்படுத்தும். உண்மையாகவே, பொருத்தமான வேலை தேடும் நபர்கள் ஏனோ தானோவென்று உருவாகிய ரெஸ்யூமை தேர்வாளர்களுக்கு / நிறுவனத்துக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு நீங்கள் உண்மையாகவே முயற்சிக்கிறீர்களா என்பதை உங்கள் ரெஸ்யூம் வெளிப்படுத்தும்.
வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் ரெக்ரூட்டர்களின் குறிப்புகள் :
தெளிவான ரெஸ்யூம் என்பது அடிப்படை. தேர்வாளர்கள் விண்ணப்பதாரர்களின் ரெஸ்யூம் எவ்வளவு தெளிவாக, விவரங்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அப்படி இருந்தால், அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.விரிவான மற்றும் முழுமையான ரெஸ்யூம், வேலைக்கு விண்ணப்பித்தவரின் தன்னம்பிக்கையைக் குறிக்கிறது. இது விண்ணப்பதாரரை தேர்வாளருடன் எளிதில் என்கேஜ் செய்ய வைக்கிறது.
தேர்வாளர்கள், வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு தெளிவாக தங்கள் ரோலை புரிந்து கொண்டுள்ளனர் என்பதைத் தான் முதலில் பார்க்கின்றனர். உதாரணமாக, மேனேஜர் ரோலுக்கு விண்ணப்பித்தால், உங்கள் ரெஸ்யூமில் நிர்வாகத்திறன் சார்ந்த அனுபவத்தை / திட்டத்தை குறிப்பிட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.