தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பயிற்றுனர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது.
தற்போது இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விரைந்து விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலியிடங்கள் எண்ணிக்கை : 97
விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu
ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 2022, டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
Also Read : 12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: மத்திய ரிசர்வ் காவல் படையில் 1458 காலியிடங்கள் அறிவிப்பு
இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், த்த தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sports, Tamil Nadu Government Jobs, Tamil Nadu Sports Development Authority