ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

20 நாட்களில் 24,000 ஐ.டி ஊழியர்கள் பணி நீக்கம்.. சிக்கலில் ஐ.டி. துறை.. ஷாக்கில் பணியாளர்கள்!

20 நாட்களில் 24,000 ஐ.டி ஊழியர்கள் பணி நீக்கம்.. சிக்கலில் ஐ.டி. துறை.. ஷாக்கில் பணியாளர்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உலக அளவில் 2023-ம் ஆண்டில் ஐ.டி துறையில் ஊழியர்கள் பணி நீக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து தற்போது முக்கிய ஐ.டி நிறுவனங்களிலிருந்து 24,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் ஐ.டி துறை என்பது இளைஞர்கள் விரும்பும் துறையாக இருந்துவருகிறது. மேலும், இந்தியாவில் எளிதில் அதிக ஊதியம் பெற வாய்ப்புள்ள ஒரு துறையாகவும் ஐ.டி துறை இருந்துவருகிறது. இருப்பினும், ஐ.டி துறையில் லே-ஆப் என்பது ஊழியர்களை பெரும் பாதிப்புள்ளாக்கும் ஒன்றாக இருந்துவருகிறது.

தற்போது, அப்படி ஒரு லே-ஆப் சூழலை தற்போது ஐ.டி ஊழியர்கள் எதிர்கொண்டுள்ளனர். 2023-ம் ஆண்டு தொடங்கியுள்ள இந்த 20 நாள்களில் உலகின் முக்கியமான 91 ஐ.டி நிறுவனங்களிலிருந்து 24,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வரும் காலங்களில் இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், காய்ன்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பணி நீக்கத்தை செய்துள்ளதாக லேஆஃப் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனமான க்ரிப்டோ நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் ஜனவரி மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் மட்டும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 17,000 ஊழியர்கள் வேலை இழப்பை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காலமான 2022-ம் ஆண்டு வரை மெட்டா, ட்விட்டர், ஓரக்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் 1,51,110 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூகுள் நிறுவனம் விரைவில் பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: IT JOBS