ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8826 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

8826 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பாதுகாப்புக்காக கூடியுள்ள போலீசார்

பாதுகாப்புக்காக கூடியுள்ள போலீசார்

தேர்வு செயப்படும் காவலர்களுக்கு ரூ.18200 - 52900 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமமானது காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற சீருடைப்பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பி வருகிறது.

  இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதில், காவல்துறையில் மட்டும் 8427 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதிலும், மாவட்ட / மாநர ஆயுதபடையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2465 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  Read Also... ரயில்வேயில் 1.30 லட்சம் பேருக்கு வேலை- எப்படி விண்ணப்பிப்பது?

  சிறைத்துறையில் 186 ஆண்கள், 22 பெண்கள் என்று 208 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 191 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.

  தேர்வு செயப்படும் காவலர்களுக்கு ரூ.18200 - 52900 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

  ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த முழு தகவல்களை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

  விண்னப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது, விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

  எனினும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உச்ச வயது வரம்பு 26 ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 ஆகவும் உள்ளது.

  எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், முழு விபரங்களுக்கு www.tnusrbonline.com என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  Also See...

  Published by:Sankar
  First published:

  Tags: Government Employees, Police