தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குச் சாதகமாக வெளியான EPFO அறிக்கை!

வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டு வருகிறது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 2:31 PM IST
தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குச் சாதகமாக வெளியான EPFO அறிக்கை!
ஈபிஎஃப்ஓ
Web Desk | news18
Updated: March 23, 2019, 2:31 PM IST
மக்களவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் கடந்த 17 மாதங்களாக இல்லாத அளவிற்கு ஜனவரி மாதம் 8.96 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதாகத் தரவுகளை வெளியிட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 131 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,75,609 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2019 ஜனவரி மாதம் தான் அதிகபட்சமாக 8,96,516 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.


2019 ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 2.44 லட்சம் வேலை வாய்ப்புகளை 22 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் பெற்றுள்ளனர். 2.24 லட்சம் வேலை வாய்ப்புகளை 18 முதல் 21 வயதுக்குள்ளவர்கள் பெற்றுள்ளனர். முன்னதாக 2018 டிசம்பர் மாதத்தில் 7.16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறியிருந்த நிலையில் அதை 1.03 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்த வேலை வாய்ப்பு அறிக்கையானது ஒவ்வொரு மாதமும் புதியதாகத் தொடங்கப்படும் யுஏஎன் எண்ணை வைத்துத் தயாரிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க:

Loading...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...