ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தாட்கோ நிறுவனத்தில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில், சுமார் 77 % இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது.
தாட்கோ என்றால் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வறுமையை ஒழிக்கும் பொருட்டு 1974ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இது, 1956 நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகும் (Social Sector Corporation). மத்திய/மாநில அரசு மானியம் மற்றும் தேசிய ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (National Scheduled Castes Finance and Development Corporation) ஆகியவற்றிடம் இருந்து நிதியுதவி பெற்று பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த, நிறுவனம் பின்வரும் மூன்று பிரிவுகளின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது.
மானியம் மற்றும் வங்கிக் கடனுடன் இணைந்து தனிநபர் பயனடையும் திட்டங்கள்(திட்ட மதிப்பீட்டில் 30% அல்லது அதிகபட்சமாக 2.50 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது) | மானியம் மற்றும் வங்கிக் கடனுடன் இணைந்து குழுக்களாக பயனடையும் திட்டங்கள் | 100% மானியத்துடன் தனிநபர் பயனடையும் திட்டங்கள் |
நிலம் வழங்குதல் திட்டம் | மகளிர் சுய உதவிக் குழு - சூழல் நிதி திட்டம் | துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் |
தொழில் முனைவோர் திட்டம் | மகளிர் சுய உதவிக் குழு- பொருளாதார மேம்பாடுத் திட்டம் | ஐஏஎஸ் முதன்மை தேர்வு நிதியுதவி திட்டம் |
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் | - | சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி |
தாட்கோ நிறுவன அமைப்பு: மேலாண்மை இயக்குனர் மற்றும் இதர உறுப்பினர்களை உள்ளடக்கிய இயக்குநர்கள் குழு தாட்கோ நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர் தலைமையில் தாட்கோ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட மேலாளர் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன.
பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மக்களுக்கான, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (national minority development finance corporation) தேசிய கழகத்திடம் இருந்து டாம்கோ நிறுவனம் கடன் நிதியைப் பெற்று, மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமே கடன் உதவியை வழங்கி வருகின்றன.
ஆனால், தாட்கோ நிறுவனம் 38 அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட மேலாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பயனர்களின் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பபங்கள் மட்டும் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வங்கிக் கடன் இசைவு குறித்த படிவம் - 3 விண்ணப்பத்தாரர் பெற்றவுடன் மானியத் தொகையை மாவட்ட மேலாளர் மானியத் தொகையை வங்கிக்கு அனுப்பி வைப்பார். விடுவிக்கும் முன், நேரில் சென்று களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மானியம் மற்றும் கடன் தொகை விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சொத்து உருவாக்கப்பட்ட விவரத்தை மாவட்ட மேலாளர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
காலியிடங்கள்: தேவையான, தகுதியான நபர்களுக்கு திட்டத்தின் பயன்கள் சென்றடைய பல்வேறு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. விண்ணப்பித்தை பெறுவது, ஆரம்பக் கட்டத்திலே நிராகரிப்பது, மாவட்ட தேர்வுக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, கள ஆய்வுகளை மேற்கொள்வது, சொத்து உருவாக்கலை ஆவணப்படுத்துவது, விழிப்புணர்வை மேற்கொள்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான மனித ஆற்றல் சக்தியை தாட்கோ நிறுவனம் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், தாட்கோ நிறுவனத்தில் கடந்த 2022 ஜுன் 30ம் தேதி நிலவரப்படி, ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் கிட்டத்தட்ட 77% பணியிடங்கள் காலியிடங்களாகவே உள்ளன. 2014 ஜனவரி 1ம் தேதி அன்று, காலியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60% ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்திருக்கின்றன.
2014, ஜனவரி 1ம் தேதி நிலவரம்:
அனுமதிக்கப்பட்ட இடங்கள் (Sanctioned) | நிரப்படப்பட்ட இடங்கள் (in Position) | காலியிடங்கள் |
610 | 246 | 364 |
நிரப்பப்பட்ட இடங்களில் (246) பின்பற்ற இடஒதுக்கீட்டு விகிதம்:
பதவி நிலை | எஸ்சி | எஸ்டி | ஓபிசி | பொது பிரிவினர் |
ஏ - நிலை பதவி | 1 | - | 5 | |
பி- நிலை பதவி | 16 | - | 16 | 53 |
சி- நிலை பதவி | 36 | - | 35 | 41 |
டி- நிலை பதவி | 25 | - | 2 |
2022, 30 ஜூன் நிலவரம்:
அனுமதிக்கப்பட்ட இடங்கள் (Sanctioned) | நிரப்படப்பட்ட இடங்கள் (in Position) | காலியிடங்கள் |
610 | 141 | 469 |
நிரப்பப்பட்ட இடங்களில் (141) பின்பற்ற இடஒதுக்கீட்டு விகிதம்:
பதவி நிலை | எஸ்சி | எஸ்டி | ஓபிசி | பொது பிரிவினர் |
ஏ - நிலை பதவி | 4 | - | - | - |
பி- நிலை பதவி | 22 | - | 18 | 7 |
சி- நிலை பதவி | 44 | 1 | 25 | 8 |
டி- நிலை பதவி | 11 | - | 1 | - |
கிட்டத்தட்ட 77% இடங்கள் நிரப்பப்பட வில்லை. நிரப்பப்பட்ட இடங்களில், பழங்குடியின பிரிவினரின் எண்ணிக்கை 1 மட்டுமே உள்ளது.
ஏற்கனவே, தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கபடுவதாகும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் கடன்கள் வங்கிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அண்மையில் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu