வங்கிகளில் 7,275 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

news18
Updated: October 9, 2018, 3:07 PM IST
வங்கிகளில் 7,275 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மாதிரிப் படம்
news18
Updated: October 9, 2018, 3:07 PM IST
இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளில் காலியாகவுள்ள கிளார்க், புரேபஷனரி அதிகாரி உள்ளிட்ட 7,275 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இன்ஸ்டிடூயூட் ஆஃப் பேங்கிங் பெர்ஸனல் செலக்ஷன் (ஐபீபிஎஸ்) என்ற அமைப்பு நடத்துகிறது. மொத்த பணியிடங்களில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு 792 இடங்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-9-2018 நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் மிகவும் அவசியம்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள் ரூ. 600-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 10, 2018. மேலும் விவரங்களுக்கு, https://www.ibps.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...