Home /News /employment /

கடந்த 7 ஆண்டுகளில் 7,22,000 பேர் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்- மத்திய அமைச்சர்

கடந்த 7 ஆண்டுகளில் 7,22,000 பேர் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்- மத்திய அமைச்சர்

அமைச்சர் ஜிதேந்திர சிங்

அமைச்சர் ஜிதேந்திர சிங்

 கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  வெளியிட்டுள்ளார்.

    மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த அவர், "கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வேலை பெற்றுள்ளனர். கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை 38,850 ஆகும்" என்று தெரிவித்தார்.   











































    கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட    ஆண்டு மொத்த நிரந்தர வேலை 
    2014-151,30,423
    2015-161,11,807
    2016-171,01,333
    2017-1876,147
    2018-1938,100
    2019-201,47,096
    2020-2178,555
    2021-2238,850
    TOTAL (2014-22)7,22,311

    மேலும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று காரணமாக யூபிஎஸ்சி, தேர்வில் வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்கப்படாது என்று இணையமைச்சர் ஜிதேந்திர சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக,  மாநிலங்களவையில் கடந்த 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்து பேசிய அவர், மத்திய அரசின் பணியாளர் சேர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2020-21, 2021-22 ஆகிய வருடங்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் 1,59,615 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.































    ஆண்டு யுபிஎஸ்சி    எஸ்எஸ்சி   ஐபிபிஎஸ் மொத்தம் 
    2020-214,21468,89123,49696,601
    2021-224,69929,02329,29263,014
    மொத்தம்  (2020-22)8,91397,91452,7881,59,615

    கோவிட்-19 தொடர்பான அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    முன்னதாக, 01.03.2020 நிலவரப்படி தற்போது மத்திய அரசுத் துறைகளில் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்களை மத்திய அரசு அறிவித்தது. அதில், உள்துறை அமைச்சகம், ரயில்வே துறை, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில்  9.79  லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க: 01.03.2020 நிலவரப்படி தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை
















































    பதவி  பணி அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கைகாலியிடங்கள்
    ஐஏஎஸ்நேரடி ஆட்சேர்ப்பு பணியிடங்கள்46613719942
    பதவி   உயர்வு இடங்கள்20541486568
    மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை671552051510
    ஐபிஎஸ்நேரடி ஆட்சேர்ப்பு பணியிடங்கள்34522992460
    பதவி   உயர்வு இடங்கள்15301082448
    மொத்தம்49824074908

    அதேபோன்று,  01.01.2020 நிலவரப்படி, ஐஏஎஸ், ஐஏஎஸ் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 2500  இடங்கள் காலியாக உள்ளன என்றும் பணியாளர் துறை அமைச்சகம் தெரிவித்திருந்ததது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment, UPSC

    அடுத்த செய்தி