ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6503 காலிப்பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றில் முதல் முரையாக பயிர்க்கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33,487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வரும் இந்த விண்ணப்பங்கள் பெற நவம்பர் 14ம் தேதியே கடைசி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Employment news, Ration Shop