வேலைவாய்ப்பு அலர்ட்: மின்வாரியத்தில் 5000 பேருக்கு வேலை!

முன் அனுபவம் இல்லாத நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

news18
Updated: March 24, 2019, 1:32 PM IST
வேலைவாய்ப்பு அலர்ட்: மின்வாரியத்தில் 5000 பேருக்கு வேலை!
மாதிரி படம்
news18
Updated: March 24, 2019, 1:32 PM IST
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன்(உதவி பணியாளர்) பணிக்கு 5000 காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 5000 கேங்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம் இல்லாத நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கியுள்ளது.


இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான தகுதி விபரங்கள்..

வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : குறைந்தது 5-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி அறிவு அவசியம்.

Loading...

பணியிடங்கள்: சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர் மற்றும் திருநெல்வேலி.

ஊதியம்: மாதம் ரூ. 15,000.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமும், இதர மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also See...

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...