இந்தியாவில் வேலை பார்ப்பவர்களில் 5-ல் 4 பேர் இந்த ஆண்டு வேலை மாற்றத்தை பரிசீலித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் சரியான ஊதியத்தை வழங்கும் பணிகளுக்கு மாறுவதில் ஆர்வமாக உள்ளனர் என்றும், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்க கூடிய நிறுவனங்களுக்கு மாறுவதற்கு விரும்புகின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றன. லிங்க்டுஇன் (LinkedIn) நிறுவனத்தின் பொருளாதார வரைபடத் தரவுகளின்படி, 2022 டிசம்பரில் இந்தியாவில் பணியமர்த்தல் நிலை 23 சதவீதம் குறைவாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது டிசம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
"இந்தியப் பணியாளர்கள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வந்தாலும், 5-இல் 4 (80 சதவீதம்) ஊழியர்கள் வேலை மாற்றுவதைக் கருத்தில் கொண்டுள்ளனர்" என்று அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், நவம்பர் 30, 2022 மற்றும் டிசம்பர் 2, 2022-க்கு இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது 18 வயதுக்கு மேற்பட்ட 2,007 ஊழியர்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிக்கையின்படி, 45-54 வயதுடைய ஊழியர்களில் 64 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 18-24 வயதுடைய ஊழியர்களில் 88 சதவீதம் பேர் பணி மாறுவதைக் கருத்தில் கொண்டுள்ளனர்.
இந்த அறிக்கை தெரிவிப்பதாவது, "கடினமான பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும், இந்திய ஊழியர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்பியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, தொழில் வல்லுநர்கள் பின்னடைவாக எண்ணினாலும் வேலை மாறுதலை எதிர்பார்க்கின்றனர்" என்று லிங்க்ட்இன் தொழில் நிபுணரும், லிங்க்ட்இன் இந்தியாவின் தலையங்கத்தின் தலைவருமான நிரஜிதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், "இந்திய ஊழியர்கள் சரியான ஊதியத்தை வழங்கும் சிறந்த நிறுவனத்தையே தேடுகிறார்கள். சீரான வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் நிறுவனங்களும் இதில் அடங்கும். எதிர்காலத்தில் நிச்சயமற்ற பொருளாதார சூழல்கள் இருந்தபோதிலும், இந்திய ஊழியர்கள் தங்கள் திறன்களில் முதலீடு செய்வதன் மூலமும், வாய்ப்புகளை முன்கூட்டியே தேடுவதன் மூலமும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள முடியும்" என்று இந்த கணக்கெடுப்பு தெரிவிப்பதாக பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
"லிங்க்ட்இன் சுயவிவரத்தில் திறன்களைச் சேர்க்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 43 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 12 மாதங்களில் 365 மில்லியன் பேர் இதை மேலும் சேர்த்துள்ளனர் என்றும் பானர்ஜி கூறியுள்ளார். இது ஒரு நிலையான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும் என்று அவர் மேலும் விவரித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நிதிப் பாதுகாப்பின் தேவை ஆகியவை தொழிலாளர்களுக்கு அதிக பணம் தேவையை உருவாக்கி உள்ளது. புதிய வேலைகளைத் தேடுவதற்கு இது முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. சில ஊழியர்கள் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்கும் நிறுவனங்களுக்கு மாறுவதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.
3-இல் ஒருவர் (32 சதவீதம்) தங்கள் திறன்களில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும், மேலும் அவர்களால் சிறந்த நிறுவனங்களை தேடி கண்டுபிடிக்க முடியும் என்றும் இந்த கணக்கெடுப்பில் ஆய்வு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Jobs