ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 3393 பணியிடங்கள் காலியாக உள்ளது - மத்திய அரசு தகவல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 3393 பணியிடங்கள் காலியாக உள்ளது - மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

All India Services vacancy : அகில இந்தியச் சேவைப் பணிகளில் 3,393 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களவையில் அகில இந்தியச் சேவைப் பணிகளில் உள்ள பணியாளர் பாற்றகுறைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு மொத்தம் 3,393 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில், IAS பணி பிரிவில் 6,789 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதில் தற்போது 5,317 இடங்களே நிரப்பப்பட்டுள்ளது. இதில் 1,472 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், IPS பணி பிரிவில் 4,984 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதில் தற்போது 4,120 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. 864 இடங்கள் காலியாக உள்ளது.

IFS பணி பிரிவில் 3,191 இடங்களுக்கு பணியாளர்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை 2,134 பணியாளர்களே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மட்டும் 1,057 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.

மக்களவையில் காலியாக உள்ள இப்பணியிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மத்திய பணியாளர் திட்டத்தில் மூலம் இணை செயலாளர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் / செயலாளர்கள் ஆகிய மத்திய அரசின் துறை மற்றும் அமைச்சகத்தில் இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read : மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் IAS, IPS and IFS பணியிடங்களை நேரடி ஆர்சேர்ப்பு மூலம் தேர்வு செய்கின்றனர். பணி உயர்வு கோட்டாவிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் 2021 ஆண்டு 180 IAS அதிகாரிகளைப் பணி நியமனம் செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதே போல், 2020 சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பின் 200 IPS அதிகாரிகளையும், 2022 இல் 150 IFS அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யும் அதிகாரிகளில் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Central Government Jobs, Employment, Unemployment, UPSC