மத்திய அரசின் மகாநதி கோல் பீல்ட் நிறுவனம் கோல் உற்பத்தி நிறுவனமாகக் கோல் இந்திய நிறுவனத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள 295 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சுரங்க பாடத்தில் டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Jr.Overman, T&S Gr-C | 82 | ரூ.31,852 |
Mining Sirdar T&S Gr-C | 145 | ரூ.31,852 |
Surveyor, T&S Gr-B | 68 | ரூ.34,391 |
வயது வரம்பு:
இப்பணிக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 30 ஆக நிரணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு தளர்வுகளும் உள்ளது.
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Mining Engineering/Mining/Mine Surveying Engineering ஆகிய பாடங்களில் 3 வருட டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதவி சார்ந்த சான்றிதழ் படிப்பு, முதலுதவி சான்றிதழ், கேஸ் சோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழி எழுத்து தேர்வு மூலம் மட்டும் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடத்தப்படாது. தேர்வில் பெறும் மதிப்பெண்கள் விதம் 3 இல் 1 பங்கு விண்ணப்பதார்கள் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
Also Read : நாளொன்றுக்கு ரூ.3,500 வரை சம்பளம் : தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://www.mahanadicoal.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC / ST / PwBD /ESM/ Female candidates போன்றவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.mahanadicoal.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.