ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கிராம உதவியாளர் பதவி

கிராம உதவியாளர் பதவி

பி.இ/பிடெக் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த கூடுதல் கல்வித் தகுதி வேலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  மாநிலத்தின் அனைத்து மாவட்ட வட்ட எல்லைக்குள் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கியது. தற்போதைய, இளம் தலைமுறையினருக்கு  இந்த பதவி குறித்து பல்வேறு சந்தேகங்கள்/கேள்விகள் எழுந்து வருகின்றன. அதனை சரிப்படுத்தும் விதமாக, கீழே சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

  தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

  வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு என்ன ?

  ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர்  பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.

  கிராம உதவியாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு? 

  ஆம்!!! தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும். பெண்களுக்கான 30% இடங்கள் உட்பட.

  மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாமா?

  ஆம்!!! விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

  இருப்பினும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் ) சட்டம் 2016- பிரிவு- 64ன் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள திறமையுடன் செய்து முடிப்பதற்கு உடல் குறைபாடு தடையாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும்.

  முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை உண்டா?   

  ஆம்!!! முன்னாள் ராணுவத்தினர்க்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 53-க்கு கீழ் இருக்க வேண்டும். பொது பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 48க்கு கீழ் இருக்க வேண்டும்.

  திருநங்கை விண்ணப்பத்தாரர்கள் சலுகைகள்?

  திருநங்கை விண்ணப்பதாரர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். பெண் என அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டின் கீழும், பொதுப் பிரிவினருக்கான 70% கீழும் பயன்களைப் பெறுவர். 

  தமிழ்நாடு திருநங்கை நல வாரியாத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். 

  கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்  என்ன? 

  • குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  
  • அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்
  • இருதாரமணம் இருக்கக் கூடாது

  பி.இ/பி.டெக் மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா? குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பி.இ/பிடெக் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த கூடுதல் கல்வித் தகுதி வேலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.

  இதையும் வாசிக்கடாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

  அரசுப் பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

  ஆம்!!! ஆனால், தங்களது துறையில் இருந்து தடையின்மைச் சான்று சமரிப்பிக்க வேண்டும்.

  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டா? 

  ஆம்!!!  கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  மேலும், கொரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், இதர காரணங்களால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், தனியார் மற்றும் அரசு நடத்தும் அனாதை இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த விண்ணப்பதாரர்கள், தாய் தந்தையற்றோர் சாண்றிதழ் பெற்றவர்கள், முதல் தலைமுறை பட்டத்தை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.     

  இதையும் வாசிக்க:    2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது...விண்ணப்பிப்பது எப்படி?

  எதனடிப்படையில் தேர்வு முறை இருக்கும்? 

  திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

  திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும்.  எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

  சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (குறைந்தபட்சம் ரூ.11;100- அதிகபட்சம் Rs.35,100)

  இதையும் வாசிக்கஎம்பிபிஎஸ் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... 1,021 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

  விண்ணப்பம் செய்வது எப்படி? 

  தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment