ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி... 2748 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி... 2748 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கிராம உதவியாளர் பணிக்கு 2748 காலியிடங்கள் உள்ளது. அதனின் சம்பளம், பணிக்கானத் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் வேலைவாய்ப்பில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் இடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பணிக்காக தகுதிகள், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் விவரங்களைக் கீழ் வருமாறு பார்ப்போம்.

  பணியின் பெயர் கிராம உதவியாளர்
  மொத்த இடங்கள் 2748
  சம்பளம்ரூபாய் 11,100 - 35,100 வரை

  கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு:

  • பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
  • பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம்கள் 21 வயதில் இருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • எஸ்.சி/அருந்ததியர்/எஸ்.டி ஆகியோர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  பணிக்கான தகுதி:

  • குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
  • சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமம் அல்லது தாலுக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  www.tn.gov.in என்ற இணையதளத்தில் what's new பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கான ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதர விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.

  Also Read : வேலை தேடிகொண்டிருக்கிறீர்களா... சென்னையில் அக்டோபர் 28ல் வேலைவாய்ப்பு முகாம்

  பணிக்கான தேர்வு:

  கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கட்டுரை எழுத வேண்டும். பின்பு நேர்முகத் தேர்வில் விண்ணப்பதார் கல்வித்தகுதி, இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். இதில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 7.11.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Government jobs, Jobs, Tamil Nadu, Tamil Nadu Government Jobs