ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை - உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்

குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை - உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்

தேர்வு எழுதும் மாணவர்கள்

தேர்வு எழுதும் மாணவர்கள்

மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புக்கொண்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68,000 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

டி.என்.எஸ்.சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக ஜூன் 17-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிட்டார்.

Also see... கம்பேக் நாயகர்கள்... அஜித், விஜய் வளர்ந்த கதை!

Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Chennai High court, Group 1, HC, TNPSC