மருத்துவ மேற்பார்வையாளர், துணை பேராசிரியர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டெல்லியில் செயல்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: ஜூன் 1
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: ஜூன் 30
https://aiimsexams.ac.in/, https://www.aiims.edu/ ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.
காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (Vacancy Post for Faculty position in AIIMS, NEW DElHI) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், தங்கள் சுய கையொப்பமிட்ட வயது, சாதி, கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் ஒளிநகல்களை (Xerox) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Sr. Administrative Officer (Faculty Cell)
Administrative Block, 1sr Floor
All India Institute of Medical Sciences
Ansari Nagar, New Delhi - 110 029
காலியிடங்கள்: 21
மருத்துவ மேற்பார்வையாளர் : 1
துணை பேராசிரியர் : 20
பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.
இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ரூ.1200 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 30.06.2022 அன்று 50-க்கு மேல் இருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 5 ஆண்டு வரை சலுகை பெற குதியுடைவர்களாவர். இருப்பினும், பொதுப் பிரிவினர் பட்டியலில் போட்டியிடும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படாது.
அனைத்து பணியிடங்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIIMS, Aiims recruitment, Doctor