ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

CENTRAL RESERVE POLICE FORCE : மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 322 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு காலியாகவுள்ள 322 பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல் மற்றும் தகுதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

விளையாட்டு பிரிவுகள்பணியிடம்
வில்வித்தை6
தடகள விளையாட்டுகள்50
பூப்பந்து8
கூடைப்பந்து6
உடற்கட்டமைப்பு14
குத்து சண்டை17
கால்பந்து7
ஜிம்னாஸ்டிக்ஸ்9
கைப்பந்து4
ஹாக்கி13
ஜீடோ17
கபடி12
கராத்தே10
துப்பாக்கி சுடுதல்18
நீச்சல்20
தண்ணீர் பந்தாட்டம்4
டிரையத்லான்2
டேக்வாண்டோ15
கைப்பந்து (வாலிபால்)9
நீர் விளையாட்டு20
எடைத்தூக்குதல்11
மல்யுத்தம்(Free Style)16
மல்யுத்தம்(Greco Roman)7
வுஷூ27

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களுக்கு வயது 18 இல் இருந்து 23 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது குறித்த தளர்வுகளுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு சிபிசி 7 ஆம் நிலை சம்பளம் படி ரூ. 25,500- 81,100/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:

மேல் குறிப்பிட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் தேசிய மற்றும் உலக அளவிலான விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியானவர்களை விளையாட்டில் பெற்ற பதக்கங்கள் மற்றும் சாதனைகள் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்க முறை:

இப்பணிகளுக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100/- Postal Order/Demand Draft மூலம் செலுத்தி ரசீதுடன் அனுப்ப வேண்டும்.

Also Read : அக்னிபாத் திட்டத்தில் இந்தியக் கடற்படையில் சேர விருப்பமா? தேர்வில் தேர்ச்சி பெற விவரங்கள் இதோ

விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

First published:

Tags: Central Government Jobs, Jobs