ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

JOB : ரயில்வே துறையில் 147 காலிப்பணியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

JOB : ரயில்வே துறையில் 147 காலிப்பணியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

Job Vacancy In Railway : ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைனில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடத்துக்கு நியமனம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்தில் 147 இடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு ரயில்வே துறை மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே தென்மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களைத் தவிர வேறு எவரும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.rrchubli.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

கடைசி தேதி :

சரக்கு ரயில் மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது, கல்வி உள்ளிட்ட தகுதி வரையறை :

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் பிரிவுகள், பணிமனைகள், தலைமையகம் போன்ற இடங்களில் பணியாற்றும் ஊழியராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவில் வராத விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 42 வயது வரை இருக்க வேண்டும். அதுவே, பிற்படுத்தப்பட்டோர் என்றால் வயது வரம்பில் 3 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் என்றால் வயது வரம்பில் 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

also read : 626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் அடிப்படையில் நடைபெறும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இதை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகள் இருக்கும். சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு, 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளில் 5ஆவது பிரிவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது  எப்படி?

ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைனில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

also read :இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..

* தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.rrchubli.in/ பார்வையிடவும்.

* ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கைக்கு அருகில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

* இப்போது புதிய பக்கத்திற்கு நீங்கள் ரீ டாரக்ட் செய்யப்படுவீர்கள். அங்கு நியூ ரெஜிஸ்டிரேசன் என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

* தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அப்லோடு செய்யவும்.

* இறுதியாக சப்மிட் கொடுக்கவும். இதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றுக்கு நோடிஃபிகேஷன் வரும்.

* எதிர்கால பயன்பாட்டிற்காக அதை சேமித்து வைத்து கொள்ளவும்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Government jobs, Job vacancies