Home /News /employment /

இந்த 3 துறைகளில் வரும் 2026 நிதியாண்டுக்குள் 12 மில்லியன் புதிய வேலைகள்! வெளியானது புதிய அறிக்கை

இந்த 3 துறைகளில் வரும் 2026 நிதியாண்டுக்குள் 12 மில்லியன் புதிய வேலைகள்! வெளியானது புதிய அறிக்கை

Job | டீம்லீஸ் டிஜிட்டல், டீம்லீஸ் சர்வீசஸின் பணியாளர் பிரிவு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த வேலைகளில் கிட்டத்தட்ட 17% வேலைகளில் சிறப்பு பணியாளர்கள் அல்லது உயர் திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட தொழில்முறை ஊழியர்கள் இருப்பார்கள். சிறப்பு பணியாளர்களுக்கான தேவை அடுத்த 4 ஆண்டுகளில் ஏறக்குறைய 3 மடங்கு (9 மில்லியனாக) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
வரும் 2026-ஆம் நிதியாண்டிற்குள் (FY26) இன்ஜினியரிங், டெலிகாம் மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் குறைந்தது 12 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அறிக்கை ஒன்றின்படி, மேற்காணும் துறைகளில் காணப்படும் தொழில்நுட்ப பெருக்கம் (technology proliferation) மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுடன் மீட்சியில் கவனம் செலுத்துவதன் காரணமாக லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அன்னிய நேரடி முதலீடு மற்றும் ப்ரொடக்ஷன்-லிங்க்ட் இன்சன்டிவ் சிஸ்டத்தின் விளைவாக இந்த துறைகளில் சிறப்புத் திறமையாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டீம்லீஸ் டிஜிட்டல், டீம்லீஸ் சர்வீசஸின் பணியாளர் பிரிவு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த வேலைகளில் கிட்டத்தட்ட 17% வேலைகளில் சிறப்பு பணியாளர்கள் அல்லது உயர் திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட தொழில்முறை ஊழியர்கள் இருப்பார்கள். சிறப்பு பணியாளர்களுக்கான தேவை அடுத்த 4 ஆண்டுகளில் ஏறக்குறைய 3 மடங்கு (9 மில்லியனாக) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 மற்றும் 2026 ஆண்டுகளுக்குக்கு இடையில், ஆட்சேர்ப்புக்கான சிறந்த பெருநகரங்களில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Professional Staffing - Digital Employment Trends Report என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கைக்காக இன்ஜினியரிங், டெலிகாம் மற்றும் ஹெல்த்கேர் துறைகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் / உயரதிகாரிகள் நேர்காணல் மற்றும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளனர். டீம் லீஸ் டிஜிட்டலின் ஸ்பெஷலைஸ்டு ஸ்டாஃபிங் தலைவரான சுனில் சி இது குறித்து கூறுகையில், இன்ஜினியரிங், டெலிகாம் & ஹெல்த்கேர் துறைகள் தொழில்துறை 4.0 ட்ரான்ஸ்ஃர்மேஷனின் விளிம்பில் உள்ளன. மத்திய தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து ஸ்மார்ட் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகள் அவற்றின் செயல்பாடுகளின் மையமாக இருக்கும் நிலைக்கு மாறியுள்ளது என்றார்.

Also Read : விப்ரோ நிறுவனத்தில் வேலை, விண்ணப்பம் செய்வது எப்படி

தற்போது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களில் 8.7 சதவீதத்தை மேற்கண்ட மூன்று துறைகள் கொண்டுள்ளன. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலை செய்யும் குறுகிய கால ஊழியர்களை பணியமர்த்துவதை உள்ளடக்கிய gig economy-யையும் நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. மொத்தத்தில் இந்த 3 துறைகள் இணைந்து உருவாக்கும் வேலை வாய்ப்புகள் வரும் 2026-ஆம் நிதியாண்டிற்குள் சுமார் 25 முதல் 27% வரை உயரும் என்று சுனில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டீம்லீஸ் டிஜிட்டலின் மற்றொரு முக்கிய அதிகரியான முனிரா லோலிவாலா பேசுகையில், gig போன்ற புதிய முறைகளை கையாள நிறுவனங்கள் தயக்கம் காட்டவில்லை. எனவே gig economy மாடலின் சதவீதம் அடுத்த ஆண்டுஇறுதிக்கும் 17 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.
Published by:Selvi M
First published:

Tags: Employment news, Jobs

அடுத்த செய்தி