தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் டெட் (TET) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தி வருகிறது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள், இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் TN TET அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.trb.tn.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த டெட் (TET) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லை. மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்னர் கல்வித் தகுதி, வயது ஆகியவற்றை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. TN TET 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க, அதிகபட்ச வயது வரம்பு இல்லாவிட்டாலும், விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. 1 முதல் 5ம்ஆ வகுப்பு வரை பள்ளிகளில் ஆசிரியர்களாக கற்பிப்பதற்கு தாள் ஒன்றிலும்; 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தாள் ஒன்றையும், பி.எட் முடித்தவர்கள் தாள் இரண்டையும் எழுதலாம். இதற்காக 3 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.