Home /News /education /

ஊரடங்கு நாளன்று திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஊரடங்கு நாளன்று திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

திட்டமிட்டபடி ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்தவகையில், மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல், வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஊரடங்கு நாளன்று, டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக அரசு ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்களை அறிவித்ததை தொடர்ந்து, தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08.01.22 (சனிக்கிழமை) மற்றும் 09.01.22 மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக இருந்த எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடகலை திட்ட உதவியாளர் தேர்வு, 08.01.22 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

    ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகள் தேர்வு, 09.01.22 அன்று காலை 10 மணி முதல் 1 வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read: கல்லூரி செமஸ்டர் தேர்வு நடக்குமா...? அமைச்சர் பொன்முடி விளக்கம்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி