• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகுமா? அடுத்தவாரம் அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை

நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகுமா? அடுத்தவாரம் அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

  • Share this:
    நவம்பர் 1 ஆம் தேதி, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இம்மாதம் 12ஆம் தேதி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார்.

    தமிழகம் முழுவதும், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால், அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    Must Read : மக்கள் பள்ளித் திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை- புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள தயாராகிறதா?

    நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை திறப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவ்வாறு திறப்பதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டதில் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: