• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நவம்பர் 1 முதல் LKG, UKG வகுப்புகள் தொடங்குமா? பெற்றோர்கள் குழப்பம்

நவம்பர் 1 முதல் LKG, UKG வகுப்புகள் தொடங்குமா? பெற்றோர்கள் குழப்பம்

மாதிரி படம்

மாதிரி படம்

ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்று கூறியுள்ளதால் பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 14-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது.

    அதில், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

    நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை ஒரிரு நாட்களில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    Also Read : அம்மா உணவகத்தை மூட திட்டம்? - சென்னையில் ஊழியர்கள் போராட்டம்

    திருச்சியில் செய்தியாளர்ககளை சந்த்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர் கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என்றுள்ளார்.

    இதனால் தங்களது குழந்தைகளை ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்த பெற்றோர்கள் அமைச்சரின் அறிவிப்பால் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்த விரிவான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: